Saturday, June 25, 2011

வரதட்சணை கொடுமை வழக்கு – ஒரு பார்வை

கடந்த சில வருடங்களாக வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகமாக பதிவாகுவதை பத்திரிக்கை, தொலைக்காட்சி வழியாக கண்டு இப்படியும் கணவர் குடும்பத்தினர்கள் இருக்கின்றார்களே என்று ஆதங்கப்பட்டதுண்டு முழுமையாக இருதரப்பினரிடமும் ஆராய்ந்து நடந்த உண்மை சம்பவத்தை விசாரிக்காத வரை.

தலைசிறந்த இந்திய குடும்ப அமைப்பை சிதைக்கும் திட்டமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொய் வரதட்சணை கொடுமை வழக்கின் மூலம் குடும்ப அமைப்பு சிதைந்து வருவதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டுமென்பதே இக்கட்டுரையின் நோக்கம், யாரையும் புண்படுத்த வேண்டுமென்பதல்ல.

சட்டங்கள் இயற்றப்படுவதன் உண்மையான நோக்கம் அனைவருக்கும் சமநீதி, அநீதியை எதிர்த்து நீதி வாழ வேண்டுமென்ற உன்னத குறிக்கோள். இந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உறுவாக்கப்பட்டதே காவல் துறையும், நீதித்துறையும். இன்று மிகுதியாக சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும், தவறாக பயன்படுத்த வழிகாட்டியாக இருப்பதும் நீதித்துறை (வழக்கறிஞர்களும்), காவல்துறையை சேர்ந்தவர்களும் என்பதே நிதர்சன உண்மை.

மக்கள் நலனுக்காக சட்டத்தை இயற்ற தெரிந்த வல்லுனர்கள், அதை எப்படி தவறாக பயன்படுத்த நினைப்பவர்களிடமிருந்து பாதுகாப்பதென்பதில் கவனிக்க தவறுவதால் அப்பாவிகள் அல்லல்படுகிறார்கள், பிறரை கெடுத்து தான் வாழ வேண்டுமென்ற சிந்தனையுடையவர்கள் இன்பமடைகிறார்கள். வேண்டுமென்றே சட்டத்தை பலகீனமாக இயற்றி, சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த அமைக்கப்பட்ட துறையை சார்ந்தவர்கள் வருவாய் ஈட்டிக்கொள்ள அரசே வழி செய்து கொடுத்துள்ளதா என்பது கடவுளுக்கே வெளிச்சம்?

அபரிதமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை மையமாக கொண்டு இயங்கும் நவீன காலாச்சாரத்திற்குள் தன்னையும் முதன்மை படுத்திக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு, தவறு என்பதற்கு அளவுக் கோலின்றி
எப்படியும் வாழலாம் என்ற மனம் போன சிந்தையே சீர்கேட்டிற்கு அழைத்துச் செல்கிறது. இதற்கு உறுதுணையாக (1) பெற்றோர்கள் - தனது பிள்ளைகளுக்கு ஒழுக்கம், பண்பாடு, நீதி, கலாச்சாரத்தை போதித்து வழிகாட்டியாக இருக்காமல் பொருளீட்டல் மட்டுமே வாழ்க்கை என்று வழிகாட்டுவது. (2) மீடியா – கெட்ட செயல்களை மட்டும் மெருகேற்றி தீய சிந்தனைகளை விதைப்பது. (3) அரசுத்துறையை சார்ந்தவர்கள் பணம் (லஞ்சம்) கொடுத்தால், வாடிக்கையாளரை திருப்தி படுத்துவது மட்டுமே எனது திருப்பணி என கூலிப்படையினரை மிஞ்சி (சட்டத்தை தவறாக பயன்படுத்தி) விசுவாசம் காட்டுவது.

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை (யும் மகளிர் காவல்நிலையத்தையும்) அரசு இயற்றியதன் உன்னத நோக்கம், பெண்ணின் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டுமென்ற உயரிய நோக்கம். ஆனால் தற்பொழுது நடைமுறையில் 99 சதவிதம் சட்டத்தை தவறாக பயன்படுத்தி (மகளிர் காவல்நிலையத்திற்கு லஞ்சம் கொடுத்தும், அநீதிக்கு துணைபோக வக்கீலுக்கு பணம் கொடுத்தும்) பணம் பறித்தும், மிரட்டி அடிபணிய வைத்தும் நவீன விபச்சாரமாக கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறது. இதற்கு உறுதுணையாக காவல்துறை, நீதித்துயையை சார்ந்தவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த பிராடுகளுக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்து நடிப்பு பயிற்சி கொடுத்து (காவல்துறை, நீதித்துறையை கேவலப்படுத்தி கோமாளியாக்கி) ஏமாற்றக் கற்றுக்கொடுப்பவர்கள் என்பது தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய விஷயம்.

பொதுவாகவே தன் தவறை மறைக்க மற்றவர்கள் மேல் அபாண்டமாக பழியை போட்டு அவதூரை பரப்பினால் தனது குறையை யாரும் ஆராய மாட்டார்கள், உண்மையை யாரும் நம்ப மாட்டார்கள் என்ற மனோதத்துவத்திற்கேற்ப,

எந்தெந்த மாதிரி பெண்கள் இந்த பொய் கேசுகளை கொடுக்கிறார்கள் என்பதற்கு உதாரணங்கள் சில:

திருமணத்திற்கு முன்:
1) பெண்ணை பற்றி சரிவர விசாரிக்காமல் நிச்சயித்து, திருமணத்திற்கு முன் பெண்ணின் அல்லது பெண் குடும்பத்தினரின் யோக்கியதை தெரிந்து விலக முற்பட்டால்?

2) இன்டர்னெட் (சாட்டிங்) வழியாக உலக அழகி போல் பொய்யான பில்டப் கொடுத்து காதலிப்பது போல் ஏமாற்றி, மயக்கி பணம் கேட்டு மிரட்டி பணியாவிட்டால்?

3) மேட்ரிமோனியல் இணையத்தளத்தில் தன்னை ஒழுக்கமான குடும்பப்பெண் போல் செய்திகளை பரப்பி, நம்ப வைத்து, ஏமாற்றி, உண்மையறிந்து உஷாரானால்?

4) வசதியான இளைஞர்களை மயக்கி, திருமணம் செய்து, சொத்தை அனுபவிக்கலாம் என முயற்சித்து நிறைவேறாவிட்டால்?

திருமணமான சில அல்லது பல வருடங்களுக்குள்:
1) திருமணத்திற்கு முன் இருந்த கள்ள தொடர்பை (கணவர் வீட்டாருக்கு) மறைத்து (ஏமாற்றி) திருமணம் செய்து கொடுத்து, பிறகு கணவருக்கு உண்மை தெரிந்து கேட்டால், பத்தினி வேஷம் போட்டு தப்பிக்க?

2) தொடரும் கள்ளக்காதல் வெளியில் தெரிந்தால், பத்தினி வேஷம் போட்டு தப்பிக்க?

3) காவல்துறை, நீதித்துறையை புரோக்கராக உபயோகித்து கணவர் குடும்பத்தாரின் மேல் அபாண்டமாக பழிசுமத்தி பணம் பறித்து தன் இஷ்டப்படி கேட்பாறின்றி மனம் விரும்பிய போக்கில் வாழ விரும்பினால்?

4) பெண்ணுக்கு இருக்கின்ற நீண்ட கால, தீர்க்க முடியாத வியாதியை மறைத்து (ஏமாற்றி) திருமணம் செய்து கொடுத்து, பிறகு கணவருக்கு உண்மை தெரிந்து கேட்டால்?

5) தாம்பத்யத் தகுதியின்மை, குழந்தை பெற தகுதியின்மையை மறைத்து (ஏமாற்றி) திருமணம் செய்து கொடுத்து, பிறகு கணவருக்கு உண்மை தெரிந்து கேட்டால்?

6) எப்படியும் வாழலாம் என்று பழகிய பெண்ணை குடும்பமாக கௌரவமாக வாழ நிர்பந்தித்தால்?

7) பணத்திற்கு (கொள்ளையடிக்க) ஆசைபட்டு வசதியான இடத்தில் திருமணம் செய்து திட்டம் நிறைவேறாவிடில், கிடைத்தவரை லாபம் என சுருட்டிக்கொண்டு சட்டரீதியாக செல்ல நினைத்தால்?

8) வசதியாக வாழ கனவு கண்டு வசதியான காதலரை நடித்து திருமணம் செய்து , கணவர் குடும்பத்தாரின் புறக்கணிப்பால், ஏமாற்றமடைந்து கணவரின் இயன்ற வருமானத்தில் நிஜ வாழ்க்கை வாழ நிர்பந்திப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனம் வெதும்பினால்?

9) திருமணத்தின் பொழுது மற்றவர்கள் எதிரில் பகட்டுக்காக பெண்ணுக்கு அதை செய்கிறேன், இதை செய்தேன் என்று வாய் சவடால் விட்டு நம்ப வைத்து நிஜத்தில் போலியான நகையை போட்டு, குறைத்து செய்துவிட்டு நிஜத்தை செய்ய அல்லது (குட்டை) மற்றவர்களுக்கு சொல்ல வலியுறுத்தினால்?

10) பிறந்த வீட்டில் மற்றவர்களை (வேலைக்காரர்கள் போல) வேலை செய்ய வைத்தே சுயநலமாக (செல்லமாக) வாழ்ந்து, புகுந்த வீட்டில் பொறுப்புகளை சுமக்கும் சூழ்நிலைக்கு ஆளாகும் போது, யதார்த்தத்தை உணராமல் மன அழுத்தத்திற்குள்ளாகினால்?

11) கணவன் என்பவன் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரம், தனது சுதந்திரத்தில் தலையிட உரிமையில்லை என சினிமா, நாடகத்தில் வரும் ஹீரோயின், வில்லி கற்பனை கதாபாத்திரத்தை போன்று (தன்னிலையை உணராமல்) வாழ எத்தனித்து, கணவர் குறுக்கீடு செய்தால்?

12) புகுந்த வீட்டில் புதுப்பெண் என்ற இரக்கத்தில் விட்டுகொடுத்து அட்ஜஸ்ட் செய்து கொண்டு கொடுக்கும் உரிமையை தவறாக ஏமாளிகள் என நினைத்து கீழ்தரமாக அல்லது ஆதிக்கம் நடத்த எத்தனித்து முயற்சி வெற்றி பெறாவிட்டால்?

13) கணவரின் பெற்றோரை கேவலமாக கொடுமைபடுத்துவதை கணவர் எதிர்த்து கேட்டால்.

14) கணவரின் பெற்றோர்கள், திருமணத்திற்கு பிறகு, கணவர் பெயருக்கோ, தன் பெயருக்கோ சொத்துக்களை மாற்றி கொடுக்காவிட்டால்?

15) கணவரின் பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்த முடியாவிட்டால், கணவர் சொத்துக்களோடு வந்து தனிக்குடித்தனம் நடத்த மறுத்தால்?

16) கணவர் தனது பேசிசை மீறி பெற்றோரிடம் பாசமாக நடந்துக்கொண்டால், பெற்றோரின் செலவுக்கு பணம் கொடுத்தால்? கணவரின் பெற்றோர், உடன்பிறப்புக்களை அனுசரித்து அரவனைப்பது தனது கடமை என கணவர் நினைத்தால்?

17) குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளையும் அனுசரித்து நடக்காமல் மனதிற்குள்ளேயே வஞ்சகத்தை வளர்த்து பிறரை துன்புருத்தி இன்பம் காண வேண்டுமென்ற சிந்தனை தோன்றினால்?

18) பெண் தனது கணவர்pடம் படுக்கையறையிலும், வெளியிலும் அன்பாக நடந்துக்கொள்ளாததால் குழந்தை, குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து விலகி செல்லாமல், அன்பை தேடி இன்னொறு திருமணம் செய்துக்கொண்டால்?

19) வீட்டோடு மாப்பிள்ளையாகவும், பெண் தரப்பு வீட்டினரை மட்டுமே உறவு என அடிமையாக்க முயற்சித்து அதை கணவர் ஏற்க மறுத்தால்?
20) குடும்ப பிரச்சனையில் தன்னாதிக்கத்தை மட்டுமே நிலைநாட்ட வேண்டுமென்ற பைத்தியம் பிடித்து விட்டால்?

இந்தக் கட்டுரை எழுதத் தூண்டியதன் நோக்கம்:
தனது பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலையில் அமர்த்த வேண்டும், மற்றவர்கள் மதிக்க வேண்டும், பணத்திற்காக கஷ்டப்பட வைக்காமல் நமது செலவை குறைத்து சேமிக்க வேண்டும், தனது சுயநலத்தை விட குடும்ப நலம் முக்கியம் என எண்ணிலடங்கா தியாகத்தை செய்து வளர்த்த ஒவ்வொரு குடும்பத்தினரும் பொக்கிஷமாக கருதும் அவர்களின் பெற்றோரையும், சார்ந்தவர்களையும் ஒரு கேவலமான சிந்தனை உடைய (இளம்) பெண் கொடுக்கும் புகாரை விசாரணைக்கு உட்படுத்தால் (இளம் பெண் என்ற மாயத்தில் மயங்கி) கைது செய்து சிறையிடதைத்து குடும்ப மானம் கௌரவத்தை சிதைக்கும் செயலை செய்யும் காவல்துறை, அநீதிக்கு துணை போகும் வக்கீல், வேலைபலு காரணமாக சிந்திக்காமல் அவசரத்தில் தீர்ப்பு சொல்லும் நீதிபதி இவர்களின் தவறால் அப்பாவி எவ்வளவு வேதனைப்படுகிறார்கள் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் அறிய வேண்டும் என்பதே.

இந்தக் கட்டுரையை படிப்பவர்களுக்கு வேண்டுகோள்:
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதற்கேற்ப:
உங்கள் பகுத்தறிவை கொண்டு இரண்டு நாட்கள் மகளிர் காவல் நிலையத்திலும், கோர்ட் வாசலிலும் நிகழ்வுகளை கண்காணித்து அவலங்களை உணர்ந்துக்கொள்ளுங்கள்.
உங்கள் ஊரில் வரதட்சனை கொடுமை வழக்கு சம்மந்தமாக பத்திரிக்கையில் செய்தி வந்தால் இரு தரப்பினரிடமும் விசாரித்து உண்மையை உணர்ந்துக் கொள்ளவும்.
கோர்ட், காவல்நிலையத்தினரின் பாரபட்சமான போக்கை, தவறு இருவரும் செய்திருந்தாலும் வழக்கு பதிவு செய்வது, சிறையிலடைப்பது, தீர்ப்பு சொல்வதில் நீதி தவறி ஒருதலைபட்சமாக நடந்துக்கொள்வதை பத்திரிக்கை செய்திகளை கவனித்து படித்து வந்தால் புரியும்.

அநீதி ஒவ்வொரு நாட்டிலும் யாரும் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை என நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இந்திய குடிமகனாகிய நாம் நமது நாட்டில் அவலங்களை ஆதங்கத்துடன் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.


மகளிர் காவல்நிலையம்:
அரசுத்துறையில் (காவல்துறையில்) உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் மேல் வருமானத்திற்கு வழியிருப்பது போல் மகளிர் காவல்நிலையத்திற்கு மேல் வருமானம் என்பது குடும்பங்களுக்கிடையில் புகுந்து கட்டபஞ்சாயத்து பண்ணியும், அப்பாவி கௌரவமான குடும்பங்களை தொல்லை கொடுத்து மிரட்டி லஞ்சம் கொடுக்கும் வஞ்சக குணம் கொண்ட பிராடுகளை சந்தோஷப்படுத்தி விசுவாசம் காட்டி பணம் பார்ப்பதேயாகும்.

எந்தெந்த காரணத்திற்காக இவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் (கமிஷன் பெறுகிறார்கள்):
• இயற்கையாகவே மனைவி இறந்தாலும், மனைவி தரப்பை சேர்ந்தவர்கள், கணவர் தரப்பை மிரட்டி சொத்தை தங்கள் பெயருக்கு எழுதி வாங்கவும், மிரட்டி பெரியத் தொகையை பறிக்கவும்.

• கணவரின் பெற்றோரையும் உடன்பிறப்புக்களையும் மிரட்டி துரத்திவிட்டு தனித்குடித்தனம் வைக்க, சொத்தை பறித்துக்கொள்ள

• தன் இஷ்டப்படி நடத்தை சரியில்லாமல் வாழ நினைக்கும் பெண்ணிற்கு கணவர் குறுக்கீடு செய்யாமலும், பெரும் பணம் பறித்து தரவும்

• பெண்ணின் குடும்பத்தினர், கணவரையும் சார்ந்த குடும்பத்தினரையும் மிரட்டி ஆதிக்கம் செலுத்த

• தான் ஏமாற்றியதை, தொடர்ந்து செய்யும் தவறை கணவர் குறுக்கீடு செய்யாமல் இருக்கு

• தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக பொய் கேசு போடுவோம் என மிரட்டி பணம் பறித்து கொடுத்தல்.

• ஒரு பெண் கணவனை உதறி தள்ளி விட்டு கள்ளகாதலனோடு தான் வாழ்வேன் என்று (கணவரே புகார்) சொன்னால், கணவரை துரத்திவிட்டு அந்தப் பெண் ஆசைப்படி கள்ளக்காதலனோடு தான் சேர்த்து வைப்பது, அதே நேரத்தில் கணவர் கள்ளக்காதலியுடன் வாழ்கிறார் என பெண் புகார் செய்தால் கணவரை(யும் குடும்பத்தாரையும்) கைது செய்து சிறையிலடைப்பது.

• காதலி விருப்பமில்லாத காதலனுடன் சேர்த்து வைக்கச்சொல்லினால் காதலன் குடும்பத்தை பல்வேறு சிக்கலான வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுப்போம் என மிரட்டி பணிய வைப்பது. பணியாவிடில் வழக்கு பதிவு செய்து அனைவரையும் சிறையிலடைப்பது. அதே நேரத்தில் காதலன் விருப்பமில்லாத காதலியுடன் சேர்த்து வைக்கச்சொல்லினால் மிரட்டி இனி இந்தப் பெண் விஷயத்தில் குறுக்கிடமாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்புவது, பணியாவிடில் வழக்கு பதிவு செய்து குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறையிலடைப்பது.

மகளிர் காவல்நிலையத்தில் பண்புரிபவர்கள் யாரும் சட்ட அறிவு பெற்றவர்களும் கிடையாது. உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் சொல்லும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்ற எண்ணமுள்ளவர்களும் கிடையாது. அராஜகமும், அடக்குமுறையையும் மட்டுமே கொள்கையாக பயிற்றுவிக்கப்பட்டவாகளாக நடந்துக்கொள்ள மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அரசு அங்கீகாரம் வழங்கிய பெண் ரௌடியாக (மகளிர் காவல்நிலையம்) வளம் வருவதால் இவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆசியும், நீதித்துறையின் 'பாவம் பொண்ணு' என்ற ஒருதலைபட்சமான ஆதரவும் நீதியின்றி தொடர்ந்து கிடைத்து வருவதால் அடுத்த குடும்ப வாழ்க்கையை சிதைப்பது பற்றி கவலைபபடுவதும் கிடையாது. அடுத்தவர்கள் வாழ்ந்தாலென்ன செத்தாலென்ன என் வயிறு ரொம்புவது தான் முக்கியம் என்பதில் தெளிவாக உள்ளார்கள்.

அரசுத்துறைக்கே உள்ள எழுதப்படாத நடைமுறையில் உள்ள சட்டமான லஞ்சம் கொடுக்கும் வரை அலைகழித்தல், தரக்குறைவாக நடத்தி அவமானப்படுத்துதல், மிரட்டுதல், மற்றவர்கள் முன் கேவலப்படுத்துதல், துன்புறுத்துதல் போன்ற செயல்களை நிறைவேற்றுவதில் நேர்மையாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்.

பொதுவாக அரசுத்துறையில் லஞ்சம் வாங்குகின்ற அனைவரின் ஒருமித்த கருத்து: அரசாங்க சம்பளத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் (மாதம் பிறந்தால் சம்பளப்பணமாக அரசாங்கம், இவர்கள் வாயில் மண்ணை மட்டுமே அள்ளி போடுவது போல) உயிர்வாழவே முடியாது. கடமையை செய்ய அல்லது மீற, மற்றவர்கள் கொடுக்கும் அல்லது துன்புருத்தி பெறும், லஞ்ச பணத்தை வைத்து தான் வாழ்க்கை ஓடுகிறது அல்லது எங்களுக்காக வாங்கவில்லை மேலிட வற்புருத்தல் என்ற சப்பைகட்டு. லஞ்சம் கொடுத்து தான் வேலையில் சேர்ந்துள்ளோம், உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கப்பம் கட்டிக்கொண்டிருந்தால் தான் பதவியில் நிலைக்க முடியும். அதிகம் வசூலித்து கொடுத்தால் தான் எங்களுக்கும், எங்களின் உயர்அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு கிடைக்கும், இதில் முதலமைச்சர் வரை பங்கு போய்க் கொண்டு இருக்கிறது என சப்பைகட்டு கட்டுவது வேறு.

99 சதவிதம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பது, (பொய்யான புகார் என்று தெரிந்தும் லஞ்சம் கொடுத்த பெண் தரப்பை திருப்திபடுத்த) பணியாவிடில் வழக்கு பதிவு செய்து பத்திரிக்கையில் செய்தி வர செய்து அவமானப்படுத்தி, முடிந்தவரை ஜாமீனை தடுத்து சிறையிலடைத்து, பிறகு விசாரனை செய்கிறோம் என்ற பெயரில் (சார்ஜ் ஷீட் தயார் செய்கின்றோமென்று)குடும்பதிதிலுள்ள அனைவரையும் அலைகழித்து, மரியாதைக்குறைவாக நடத்தி அவமானப்படுத்தி பாதிக்கப்பட்டவரும் லஞ்சம் கொடுக்கும் வரை இன்னல் தொடரும். தற்காப்புக்காக இவர்களை எதிர்த்தால் தொல்லைகள் தான் அதிகம். 1000 ரூபாய் கொடுத்தால் போலீஸ் ஜீப்பும், போலீஸ் ஸ்டேஷனையும் குத்தகைக்கு எடுத்து தனக்கு பணியாத மாப்பிள்ளை, மாப்பிள்ளை உறவினரை ஸ்டேஷனுக்கு தூக்கிக்கொண்டு வரவைத்து அத்துமீறி நடந்துக்கொள்ளலாம் என்பது ஊரரிந்த செய்தி. காவல்துறை, நீதித்துறையில் உள்ளவர்களுக்கு உண்மை தெரிந்தும் தூங்குகின்ற மாதிரி நடிப்பவர்களே மிகுதியாக உள்ளார்கள்.

மகளிர் காவல்நிலையத்தில் உள்ளவர்கள் சொல்வது, தவறு பெண் (பெண் என்றால் திருமணமாகாத பெண் அல்லது இளம் மனைவி) பக்கமிருந்தாலும் நாங்கள் பெண்ணிற்கு சாதகமாகவும், ஆண் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு (பெண்கள் உட்பட) எதிராகசும் செயல்பட வேண்டுமென்பது எழுதப்படாத சட்டம் என்பது மகளிர் காவல்நிலையத்தினரின் சப்பைகட்டு.

பத்திரிக்கை துறை:
பணத்திற்கும், புகழுக்கும், பிரதி அதிகமாக விற்பனையாக வேண்டுமென்ற வெறியினாலும், உண்மை நிரவரத்தை நடுநிலையோடு ஆராய்ந்து வெளியிடாமல், அரைவேக்காட்டு தனமான நிருபர்களிடமிருந்து பெறப்பட்ட அரைவேக்காட்டு தனமாக செய்திகளையும், உண்னையை சுய புத்தியைக் கொண்டு ஆராயும் திராணியின்றி முழுமையாக விசாரனை செய்யப்படாத காவல்துறை தரப்பு செய்தியை (முதல் தகவல் அறிக்கை) சிந்தித்து செயல்படாமல் பரபரப்புக்காக வெளியிட்டு மஞ்சல் பத்திரிக்கை ரேஞ்சிலேயே தரம் தாழ்ந்து போய் அப்பாவி குடும்பத்தினரை அவமானப்படுத்துவதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. மனசாட்சிக்கு பயந்து பிறகு உண்மை தெரிந்தாலும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் கிடையாது. காவல்துறை தரப்பின் முதல் தகவல் அறிக்கைக்கு பிறகு காவல்துறை விசாரணையிலும், நீதித்துயை விசாரனையிலும் நடந்த உண்மையை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.

வரதட்சனை கொடுமை வழக்கு என்று செய்தி வந்த சம்பவத்தின் இரண்டு தரப்பையும் விசாரித்தால் 99 சதவித வழக்குகள் பொய்யாகவே தொடுக்கப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பத்திரிக்கை துறை நடுநிலையானவர்கள் என்ற நிலை தேய்ந்து எப்படியும் பணம், புகழ் சம்பாதிக்கணும் என்ற வெறியுடன் அலையும் மோசமான நிலைக்கு சென்றுக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. மீடியாத்துறை என்பது நம்பிக்கையூட்டக்கூடிய, நம்பகத்தன்னையுள்ள துறை என்ற நிலை மாறி சமுதாய வழிகேட்டிற்கு இவர்களை மிஞ்ச ஆளில்லை என்ற நிலைக்கு முன்னோடியாக சென்றுக்கொண்டிருக்கின்றது.

பொய் வரதட்சனை கொடுமை வழக்கை உண்மை போல பத்திரிக்கையில் வெளியிட்டு கௌரவமான அப்பாவி குடும்ப மானத்தை ஊர், உலகம் முழுக்க நாறடித்து எத்தனை லட்சம் குடும்பங்களை அவமானப்படுத்தி உயிரோடு சாகடித்துள்ளார்கள் என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், சார்ந்த உறவினர்களுக்கும் மட்டுமே நெஞ்சக்குமுறல் தெரியும். தவறு செய்கின்ற அரைவேக்காட்டு மஞ்சல் (தினசரி) பத்திரிக்கைத் துறையினருக்கு தெரியாது.
சொந்த உழைப்பில் நேர்மையாக, ஒழுக்கமாக வாழ வேண்டுமென்ற கொள்கையுடம் இருக்கும் பெரும்பான்னையான மக்கள், கௌரவத்தை தான் சொத்தாக கருதுவார்கள். தலைமுறை தலைமுறையாக அவர்கள் கட்டிக்காத்த கௌரவத்தை, இந்த பத்திரிக்கைதுறை உண்மை நிலவரத்தை ஆராய்ந்து செய்தி வெளியிடாமல், பத்திரிக்கை பக்கங்களை நிரப்பி பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் அரைவேக்காட்டு செய்தியை வெளியிட்டு மொத்த குடும்ப கௌரவத்தையும் குலைக்கின்ற மட்டமான செயலில் ஈடுபடுவது வேதனையான விசயம்.

இந்த பத்திரிக்கை செய்தியினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சொல்ல விரும்புவது:
இன்றைய செய்தி, நாளைய குப்பை. என்று குப்பையை நினைத்து கவலைப்படுவதை தவிர்க்கவும்.
மனசாட்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு எப்படியும் பணம் சம்பாதிக்கனும் என்ற வேசித்தனத்திற்கு புகுந்து விட்டவர்ளை திருத்த முடியாது. பணமும், கௌரவத்தை விட்டு கொடுத்து எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கொண்ட நாட்டில், உண்மை நிலையை உணர்ந்து, பாதிக்கப்பட்ட நாம் தான் நொந்து போய் ஒதுங்கி வாழ்ந்தால், மீதமுள்ள வாழ்நாளில் ஓரளவு தொல்லையில்லாமல் மிச்ச கௌரவத்தோடு இருக்கலாம்.



விரைவில் கீழ்கண்ட தலைப்பில்:
• வக்கீல்கள் எனும் பணத்திற்காக கேவலமான சிந்தனை, செயல்பாட்டை கொண்டவர்கள்
• கோர்ட் மற்றும் நீதிபதிகள் என்ற அப்பாவிகளை அலையவிட்டு மனஉலைச்சலை உண்டாக்கி உயிரோடு சாகடிப்பவர்கள்.
• வழக்கிற்கு பிறகு இரு தரப்பினரின் மன நிலை
• அரசாங்கத்திற்கு வேண்டுகோள்