Monday, January 23, 2012

யார் சொன்னது நீதித்துறையில் லஞ்சமில்லையென்று?

யார் சொன்னது நீதித்துறையில் லஞ்சமில்லையென்று?

முன் பதிவை பார்வையிட்டு தொடர்ந்தால் விளக்கமாக புரியும்.
வரதட்சணை கொடுமை வழக்கு – ஒரு பார்வை
மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் யதார்த்த நிலை
சிறை மற்றும் நீதித்துறையின் அவல நிலை

அரசுத்துறையிலேயே இடைத்தரகர் (வக்கீல்) இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது விண்ணப்பதாரர் சாதிக்கமுடியாத ஒரே துறை நீதித்துறை மட்டுமே. மற்ற அரசுத்துறையில் ஒரளவுக்காவது நாம் நேரடியாக சந்தித்து நம் பிரச்சனையை முறையிட்டு சூழ்நிலைகளை அறிந்துக்கொள்ள, நிறைவேற்றிக்கொள்ள முடியும்.  நீதித்துறையில்?????

பெரும்பாரும் நீதித்துறையில் லஞ்சங்கள் (வக்கீலுக்கு சேருவது இல்லாதது) வக்கீல்கள் வழியாகவே பரிவர்த்தனங்கள் நடக்கும் அல்லது வக்கீல் வழிநடத்துவார் யார் யாரிடம் எப்படி கொடுக்க வேண்டுமென்று. பிரபல வக்கீல்கள் என மிக அதிகமாக பீஸ் (எல்லாத்துக்கும் சேர்த்து) வாங்குகிறவர்கள், தானே அனைவரிடமும் சேர்த்து சரிகட்டிவிடுவார்கள்.

காவல்துறையில் சார்ஜ் ஷீட் பைல் பண்ணி கோர்டில் பைல் பண்ணி சீக்கிரம் விசாரணைக்கு வர அரசுத்துறை வழக்கறிஞரை கவனித்தால் போதும்.

சார்ஜ் ஷீட்டை சரியில்லை என திருப்பி காவல்துறைக்கே அனுப்பி வீக்கான அல்லது சட்ட ஓட்டை உள்ள சார்ஜ் ஷீட் தயார் செய்ய அரசுத்துறை வழக்கறிஞரை கவனித்தால் போதும்.

முன் தேதியிட்டு நீதிமன்றத்தின் வழியாக வழக்கு, நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென்றால் கவனித்தால் அதுவும் நடக்கும்.

நீதிமன்ற நோட்டீஸை தபால் வழியாக இல்லாமல் வீடு தேடி போய் கொடுக்கவைக்க கவனித்தால் அதுவும் நடக்கும்.

வழக்கு விசாரணை தேதியில் உங்கள் பைல் மேலே (முதலிலே அழைக்க) வேண்டுமானால் கவனித்தால் அதுவும் நடக்கும்.

நீதிபதிகளின் மனநிலையை அறிந்து வக்கீலே வழிகாட்டுவார் எப்படி நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து வழக்கை, தீர்ப்பை சாதகமாக்கிக் கொள்வதற்கு.

லஞ்சம் வாங்காத நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்று கூற முடியுமே தவிற நீதிபதிகள் யாரும் லஞ்சம் வாங்கவே மாட்டார்கள் என்று தலைமை நீதிபதியால் கூட கூற முடியாது, ஏனைனில் வக்கீல் தொழிலிலிருந்து வந்த (நீதிபதிகள்) அனைவருக்கும் தெரியும் யாதார்த்த நிலைபாடுகள். அனைவரும் சராசரி மனிதர்களே! தன்னிச்சையாக பொதுமக்களின் வாழ்க்கையை
இவர்களை கொண்டு தீர்மானிக்க வைப்பது ஆபத்தானது.

நீதிமன்றத்திற்கு கொஞ்ச நாள் போய் வந்தாலே புரியும் இந்தியாவில் உள்ள ஊழலுக்கும், சீர்கேட்டிற்கும் காரணகர்த்தாவே நீதித்துறையில் உள்ள ஊழல் தான் என்பது.

வழக்கை தாமதப்படுத்துவது, குழப்புவது, இடைக்கால உத்தரவு வாங்குவது, ஒரே பிரச்சனைக்கு பல்வேறு வழக்கு போடுவது, விசாரணை என்ற பெயரில் வக்கீல்கள் (பணத்துக்காக) வழக்கில் சம்மந்தப்பட்ட அப்பாவிகளையும், நேர்மையான அதிகாரிகளையும் எவ்வளவு அசிங்கமாக பேசமுடியுமோ, அவமானப்படுத்தமுடியுமோ செய்து (அப்பாவிகள் வெறுத்து ஒமுங்கும் அளவுக்கு) போன்ற (அநீதியை நிலைநாட்ட) செயல்கள் அனைத்தும் லஞ்சமாகவே கருத வேண்டும்.

மனம் போன போக்கில், ஒரு தலைபட்சமாக (நியாயத்தை பார்க்காமல், பாவம் பொண்ணு என்று நினைத்து) தீர்ப்பு சொல்வதும் லஞ்சமே.

கீழ்கோர்ட்டில் சரிவர நீதி கிடைக்காமல் மேல் கோர்ட்டில் நீதி கிடைத்தால், கீழ்கோர்ட்டில் செய்த அலட்சியமும் லஞ்சமே.

அரசுத்தரப்பு என்பது (காலம், ஆட்சிக்கு தகுந்தவாறு) அரசியல்வாதிகளின் தரப்பாக மாறி வழக்கை எதிர்கொள்வதும் லஞ்சமே.

உயர், உச்ச நீதிமன்ற வக்கீல்களை வழக்கிற்காக அறிமுகப்படுத்தி வைத்து வாங்கும் கழிஷனும் லஞ்சமே

வழக்கு பற்றி நன்றாக தெரிந்தும் குற்றவாளி சார்பாக அநீதியாக வாதாடி பணத்திற்காக குற்றவாளியை தப்ப விடுவதும் லஞ்சமே.

அப்பாவியை விசாரணை கைதியாக அடைத்து வைத்திருப்பதும் லஞ்சமே.

லஞ்சம் என்பது நியாயமின்றி அப்பாவியின் நேரத்தையும், பணத்தையும், மன உலைச்சலையும் ஏற்படுத்துவது.

ஏன் நீதிமன்றம் விழிப்புடன் செயல்படாமல் இருக்கிறது??? நீதித்துறை சீர் செய்யாதவரை நமது நாட்டிற்கு விடிவே கிடையாது.

குற்றவாளிகள் (அநீதியாக) நல்ல வக்கீலை வைத்து வாதாடி (உயர், உச்ச நீதிமன்றம் வரை கூட சென்று ஏமாற்றி) வழக்கை ஒன்றுமில்லாததாக்கி நீதியை சாகடிப்பதும் லஞ்சமே. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் நீதியை நிலைநாட்ட ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் அலைந்து பணத்தை செலவு செய்வதும் லஞ்சமே.

வரதட்சனை கொடுமை வழக்கு, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக வழக்கு என பல சட்ட பிரிவுகள் பெரும்பாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது காவல்துறையிலிருந்து நீதித்துறையில் உள்ள அனைவருக்கும் தெளிவாக தெரிந்தும் உண்மை நிரூபிக்கப்பட்டால் பொய்வழக்கு போட்டவர்கள் (சார்ந்த சாட்சிகள், சரிவர விசாரிக்கத்தெரியாத காவல்துறையினர், அநீதிக்கு துணைபோன வக்கீல்கள் உட்பட) மீது நீதித்துறை தானே முன்வந்து வழக்கு பதிந்து தண்டனை வழங்காமலும், பாதிக்கப்பட்ட அப்பாவிக்கு நஷ்ட ஈடு உடனே பெற்று தராமல் இருப்பதும் லஞ்சமே.

பொதுமக்கள் மட்டுமே நீதிபதியிடம் நேரடியாக வாதிட்டால் (வக்கீல்கள் வழக்கை நீட்டிக்கொண்டோ, குழப்பிக்கொண்டோ இருந்து பணம் சம்பாதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது இல்லாமல்) கோடிக்கணக்காக வழக்குகள் தேங்கியிருக்காது. குறுகிய காலத்திலேயே தீர்வும் கிடைத்து விடும்.

ஒரு பாமரனாகிய என் மனதில் தோன்றும் கேள்வி?


வழக்கை சட்டத்தின் நுணுக்கத்துடன் நீதிபதி முன் வாதிடுவதற்கு வக்கீல் தேவையெனில், போதிய சட்ட அறிவு இல்லாதவர்களை நீதிபதிகளாக நியமித்தது யார் தவறு? பொதுமக்களாகிய நாம் ஏன் பணத்தை செலவு பண்ணி நீதிபதிக்கு சட்ட படிப்பை சொல்லிக்கொடுக்க வேண்டும்??

வழக்கு சம்பந்தமாக நீதிபதிகளுக்கு சட்டத்தை எடுத்து சொல்லி உதவி செய்யும் இருதரப்பு வக்கீலுக்கும் அரசு தானே செலவிட வேண்டும்? ஏன் பொதுமக்களிடம் வசூலிக்கிறார்கள்? 

நீதிபதிகளுக்கு வழக்கிற்கு தகுந்தாற்போல் சட்டத்தை எடுத்து கொடுக்க சாப்ட்வேர் இல்லையா?

ஓவ்வொரு நீதிமன்ற தீர்ப்பையும் நீதித்துறைக்குள்ளேயே உயர், உச்ச நீதிமன்றம் வரை மீளாய்வு செய்து இறுதியாக தீர்ப்பை வெளியிட்டால் பொதுமக்கள் தனித்தனியாக ஒவ்வொரு இடத்திற்கும் அலைய வேண்டியதில்லையே?

நீதித்துறையில் கட்டமைப்பில்லாததற்கு அப்பாவியாகிய நான் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்? அரசாங்கத்திற்கு அல்லாது அரசுத்துறையில் உள்ள நமது காரியத்திற்கு கொடுக்கும் பணத்தை லஞ்சமாகவே கருதுகிறேன்.

ஒரு வழக்கிற்கு அதிகபட்சமாக 500 ரூபாய் தான் வாங்க வேண்டுமென சட்டமியற்றுங்கள் பார்ப்போம்???? 50 லட்சம் செலவு பண்ணி படித்த டாக்டர்களே குறைவாகத்தான் பீஸ் வாங்குகிறார்கள் இவர்களை ஒப்பிடுகையில், அதே நேரம் நமது வியாதி குணமாகுவதை நம்மால் கணிக்க முடியும்.

பொய் புகார் கொடுத்து ஒரு வழக்கு பதிவு செய்வதற்கும் , (மிரட்டி பணம் பறித்துவிட்டு) வாபஸ் வாங்குவதற்கும் சில நிமிடங்கள் போதும் சட்டத்தின் படி (காவல்துறையிலும் மற்றும் நீதித்துறையிலும்), ஆனால் அப்பாவி உண்மையை எடுத்து வைத்து நிருபித்தாலும் நிரபராதி என்று தீர்ப்புவர வருடங்கள் ஆகும், அவனிடம் உள்ள சொத்துக்களை கறைத்து நிர்மூலமாக்கும் வரை. இதனால் தான் அனைவரும் கோர்ட் கேஸ் என்பது கேன்ஸர் போன்றது உயிரை எடுக்காமல் விடாது என்று அனுபவித்தவர்கள் சொல்வது.

பொய் புகார் கொடுத்தவர்களையும், சார்ந்த சாட்சிகளையும், அநீதிக்கு துணை போன வக்கீல்களையும், அலட்சியமாக சட்டத்தை இயற்றிய துறையினரையும், வழக்கை சரிவர விசாரிக்காமல் தொல்லை கொடுத்த காவல்துறையினரையும், ஆராயாமல் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், விசாரணை மற்றும் வழக்கை நீட்டிக்கொண்டே போனவர்களையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி பாதிக்கப்பட்ட அப்பாவி (வக்கீல் துணையின்றி) தண்டணை வாங்கிக்கொடுக்கும் காலம் வந்தால் தான் நீதியை நிலைநாட்ட முடியும். அனைவரும் பொறுப்புடன் நடந்துக்கொள்வார்கள்.

இந்தியர்களின் இதயம் பலவீனமாக இருப்பதற்கும், மன உலைச்சலினால் மன அழுத்தம், நீரிழிவு மற்றும் இதயக்கோளாறு வந்து இறப்பதற்கு நீதித்துறையும் காவல்துறையும் பொறுப்பு என்பதை எந்தளவு உண்மை என்பதை பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் கேட்டு பாருங்கள் தெரியும்.

இறந்த ஒருவரின் மனதை படிக்கும் மருத்துவம் இருந்தால் சொல்லும் நாட்டில் அதிகமாக கொலையாளிகள் இருக்கும் துறை நீதித்துறை, காவல்துறை, மருத்துவத்துறை என்று.

சுயபரிசோதனை வேண்டுமெனில் செய்து பாருங்கள், ஒரு மனிதருக்கு நீரிழிவு, இதயக்கோளாறு, மன அழுத்தம் நோய் ஏற்படுத்த வேண்டுமெனில் காவல்துறை, நீதித்துறையில் லஞ்சம் கொடுத்து சிக்கலான சட்டபிரிவில் வழக்கு ஜோடித்து தொல்லை கொடுக்க சொன்னால் கச்சிதமாக செய்து கொடுப்பார்கள். இதே பார்முலாவை உபயோகித்து நீரிழிவு, இதயக்கோளாறு, மன அழுத்தம் நோய் உள்ளவர்களையும் வயதானவர்களையும் சாகடிக்கலாம்.

ஒருவரை வாழ்வில் முன்னேர விடாமல் தடுக்க வேண்டுமா? சந்தோசத்தை குலைக்க வேண்டுமா? காவல்துறை, நீதித்துறையில் எப்படியெல்லாம் பொய் கேசு போட்டு டார்ச்சர் கொடுத்து நிலைகுலைய செய்யலாம் என்பதை பார்த்துக்கொள்வார்கள். பிராடுகளுக்கு கோர்ட் கேஸ் என்பது சாதாரண விசயம். நல்ல அந்தஸ்தான குடுமபத்தில் பிறந்து நேர்மையாக வாழ பயிற்றுவிக்கப்பட்டவர்களுக்கு தான் இதன் வேதனை புரியும்.

நீதிபதிகளுக்கும், வக்கீலுக்கும் தினமும் கோர்ட் வருவது அவர்கள் தொழில், வழக்கை நீடித்து பொதுமக்களை அடிக்கடி அலையவிடுவதால் பொதுமக்களுக்கு தொல்லைகள் தபன் அதிகம். புலி வாலை பிடித்த கதை போல. பொய் புகார் கொடுத்தவர்களுக்கு எப்படியும் லாபமே, நீதிபதி எப்படியும் பணம் பறித்து கொடுத்து விடுவார் என்பதால்.
சட்டத்தை ஒருதலை பட்சமாக இயற்றுவது, சரி செய்யாமல் அப்பாவிகள் தானே கஷ்டப்படுகிறார்கள் என்று துறையை சார்ந்தவர்கள் அலட்சியமாக இருப்பதும், மனம் போன போக்கில் (பாவம் பொண்ணு என்று) தீர்ப்பு சொல்வதும் பொதுமக்களிடம் பிரிவினையை உண்டுபண்ணி நாட்டை பலவீனப்படுத்தாதா??? சட்டம் அனைவருக்கும் சமமாகவும் நீதமாகவும் தானே இருக்க வேண்டும்?

சமீப காலமாக இந்தியர்கள் IT, Business Consulting & Management-   ல் முன்னேறி வரும் நிலையில், அரசாங்கமே ஒவ்வொரு துறையில் உள்ள அவலங்களை சீர் செய்ய Private consulting company யை அமைத்து ஆலோசனை பெறலாம். ஏனெனில் அரசுத்துறையில் உள்ள மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை உள்ளவர்களுக்கு துறையில் உள்ள தவறுகள் தெரிந்தும் பூனைக்கு யார் மணி கட்டுவது என கட்டுங்காணாமல் இருப்பதால்.

சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சட்டமே முன் வந்து என்ன (backfire) செய்தது? சட்டம் என்பது தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் அப்பாவிக்கும் இடையே இடைத்தரகராக இருந்து அப்பாவிக்கு மிகுதியாக தொல்லை கொடுக்கிறது.

ஒவ்வொரு குடிமகனையும் நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய சொத்தாக மாற்றக்கூடிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இந்தியா அஹிம்சையின் மூலம் வெற்றி கண்ட நாடு. அடக்குமுறையின் மூலம் காவல் நிலையத்திலும், சிறையிலும் தவறு செய்பவர்களையும், தவறு செய்யாதவர்களையும் நேரடியாக துன்புறுத்தியும், அவர்களை சார்ந்தவர்களை நிர்கதியாக்கி மறைமுகமான துன்பத்தையும் கொடுக்கிறது.

பாதுகாப்பு என்பது வன்முறையிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்ல, தொந்தரவு மற்றும் மன உளைச்சல் கொடுக்காமல் வாழ வழிவகை செய்வதும் பாதுகாப்பே.

லாபத்திற்காக பொய் வழக்கின் மூலம் அப்பாவிகளை துன்புறுத்தும் காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கும் கூலிப்படையினருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நோக்கம் ஒன்றே, சக்திக்கேற்றாற் போல் வழிமுறை மாறுபடுகிறது.

இந்தியாவில் தீவிரவாத அச்சுதலுக்கு பாதிக்கப்பட்டவர்கள் 0.01 சதவிதத்திற்கு குறைவாக இருப்பார்கள். ஆனால் கர்ப்பத்தில் ஆரம்பித்து மறைவு வரை லஞ்சம் மற்றும் ஆதிக்கம் ஆகிய உள்நாட்டு தீவிரவாதத்தால் மக்கள் பாதிக்கிறார்களே, அரசாங்கம் இராணுவ பட்ஜெட்டை இந்த உள்நாட்டு தீவிரவாதத்துக்கு செலவு செய்தால் அனைத்து இந்தியருக்கும் பலன் கிடைக்குமே???

மீண்டும் நினைவுபடுத்துகிறேன். இந்தக் கட்டுரை யாரையும் குறை சொல்ல வேண்டுமென்பதற்காக எழுதவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக்குமுறலை உணர்ந்து சிந்தித்து செயல்படுவதற்கே.