Sunday, December 4, 2011

மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் யதார்த்த நிலை

முதல் பதிவை பார்வையிட்டுவிட்டு இதை தொடர்ந்தால் விளக்கமாக புரியும். கீழே கிளிக் செய்யவும்
வரதட்சணை கொடுமை வழக்கு – ஒரு பார்வை

மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் யதார்த்த நிலை:
கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும், புகார் கொடுத்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையினரும், நீதிபதிகளும் வலியுறுத்துவதன் உள்நோக்கம் காவல்துறையும், வக்கீல்களும் மட்டுமே அப்பாவிகளிடம் பணம் பறிக்க அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் என்ற சுயலாபத்தை மனதில் கொண்டு நடிப்பவர்கள் என்பதையும், பணத்திற்காக காவல்துறை என்பது அப்பாவிகளை உயிரோடு சாகடிப்பதில் தீவிரவாதத்ததையும் நீதித்துறை மிதவாதத்ததையும் கடைபிடிப்பதின் உண்மை நிலையை இந்தக் கட்டுரையை முழுமையாக படித்து நடைமுறையை ஒப்பிட்டு பார்த்தால் புரியும். தற்போதைய நாகரீகமாக வேண்டப்படாதவர்களை கூலிப்படையை வைத்து துன்புறுத்துவதை விட அரசு அங்கீகாரம் பெற்ற கூலிப்படையான காவல்துறையிடம் பணத்தை கொடுத்தால் வேலை சுலபமாக முடிகிறது, நமக்கும் சிக்கல் வராது. அதற்க்கும் மேல் காவல்துறையின் அத்துமீறல்களை வேண்டப்படாதவர் எதிர்த்தால் அரசுத்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் என மேலும் வழக்குகளை பதிவு செய்து வாழ்க்கையை சீரழித்து விடுவார்கள், அரசும் நம்பும் என்பதே பொதுவான கண்ணோட்டம்.

காவல் நிலையத்தில் பணத்திற்கு ஆசைபட்டு கேவலமாக நடக்க மறுத்தால் அவர்களை பணிய வைக்க லஞ்சம் வாங்கும் மேல் அதிகாரிகளை அணுகினால் முன்னின்று வரைபடம் போட்டுக்கொடுத்து அடிக்கடி தொலைபேசியில் பிரஷர் கொடுத்து காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும் அல்லது ஒரு கிரிமினல் லாயரை அணுகினால் காரியத்தை சட்ட ரீதியாக பிரஷர் கொடுத்து முடித்துக்கொடுப்பார்.

மேற்குறிப்பிட்ட தன்மையை சார்ந்த பெண்கள் (தரப்பினர்) மகளிர் காவல்நிலையத்தை காந்தி படம் போட்ட பணத்துடன் அணுகி கணவர் மற்றும் சார்ந்த குடும்பத்தை மிரட்ட வேண்டும், துன்புறுத்த வேண்டும், பணம் பறிக்க வேண்டும், சொத்தை பறிக்க வேண்டும், சிறையிலடைத்து அல்லது தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று வக்கீல்கள் துணையுடனோ அல்லது நேரடியாக காவல்நிலையத்தையோ அணுகினால் புகார் மனு எப்படி தயாரிப்பது? எந்தெந்த சிக்கலான சட்டபிரிவில் எந்தமாதிரியான சம்பவங்கள் நடந்ததாகவும் மற்றும் கடுமையான வார்த்தைகள் உபயோகித்ததாகவும் புகார் மனுவில் பொய்யாக குறிப்பிட வேண்டும்? யார் யாரை வழக்கில் சிக்கவைத்து துன்புறுத்த வேண்டும் குறிப்பாக வயதானவர்கள், மதிக்கக்கூடியவர்கள்? யார் யாரிடம் எப்படி நடிக்க வேண்டும் குறிப்பாக மீடியா, நீதிபதி, அதிகாரிகள், அமைப்புகள்? என்று நயவஞ்சக ஆலோசனை வழங்கி வழிகாட்டுவார்கள். உதாரணத்திற்கு நடைமுறையில் காவல், நீதித்துறையினர் வழங்கப்படும் ஆலோசனைகள் சில, ஆனால் இது மாதிரி ஆலோசனை (கடுமையான சட்டபிரிவுகளில் வழக்கை பதிவு செய்ய)வழங்குவதில் கில்லாடி வக்கீல்கள் தான்:

1. கணவரோ, அவரது உறவினர்களோ புதிதாக இடம், தொழில் செய்ய இருந்தால் அல்லது செய்துக்கொண்டிருந்தால் அதன் பணத்தேவைக்காக வரதட்சனை கேட்டதாக பொய் புகார் செய்து மற்றவர்களை நம்ப செய்யலாம்.

2. கணவரின் உறவினர்கள், நண்பர்கள் கற்பழிக்க முயற்ச்சித்ததாக பொய் புகார் செய்து மற்றவர்களை நம்ப செய்யலாம்.

3. வருடக்கணக்கில் பிரிந்து வாழ்ந்தாலும், நேரே கணவர் வீட்டிற்கு கத்தியுடன் சென்று தன் கையை கிழித்துக்கொண்டு வெளியே ரோட்டில் ஓடிவந்து தன்னை கொல்ல முயற்சிக்கிறார்கள் என ஒப்பாரி வைத்து நடித்து அரசு மருத்துவமனையில் சேர்ந்து பொய் புகார் செய்து மற்றவர்களை நம்ப செய்யலாம்.

4. கணவர், சார்ந்தவர்கள் மற்ற நாட்டில் இருந்தால் தொலைபேசியில் மிரட்டியதாகவும் பொய் புகார் செய்து மற்றவர்களை நம்ப செய்யலாம்.

5. கட்சி, தொண்டு நிறுவனத்தினர், மீடியாக்காரர்கள் உதவியுடன் தர்ணா செய்து பொய்
புகார் செய்து மற்றவர்களை நம்ப செய்யலாம். இளம்பெண் சொன்னால் உண்மையாகத்தானே இருக்கும் என்ற ஹீரோக்கள் தானே அதிகம்?


புகாரும், பணமும், கவனிப்பும் வந்தவுடன் மகளிர் காவல் நிலையத்தினரின் சேட்டைகள் ஆரம்பமாகும்.

1. கவனிப்புக்கு உதாரணமாக பிரபலமான ஹோட்டலிலிருந்து வகை வகையான சாப்பாடு வாங்கிக்கொண்டு போய் கொடுக்க வேண்டும், பிறகு காபி,ஐஸ் கிரீம், பழச்சாறு, பீடா என அத்தனையும் தொடர்ந்து சாப்பிடுவார்கள். வீட்டிற்கும் பார்சல் வேறு. இதற்கெல்லாம் புரோக்கர்களும் உண்டு.

2. போலீஸ் ஜீப் பணம் கொடுத்தவருக்காக அவர்கள் சொல்லும் இடத்திற்கெல்லாம் (கணவர், சார்ந்தவர்கள் வீட்டிற்கெல்லாம் போலீஸ் ஜீப்பில் சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்து குற்றவாளிகள் போல் அவமானப்படுத்த) சென்று கணவரையும், அவரை சார்ந்த பெரியவர்களையும் கண்ணியக்குறைவாகப்பேசி விசாரிப்பதாக மற்றவர்கள் முன் அவமானப்படுத்துதல்

3. விசாரணைக்கு என்று அழைத்துச் சென்று ஸ்டேஷனில் (லஞ்சம் கொடுத்தவர்களை சந்தோசப்படுத்த அவர்கள் முன்) கணவனையும், அவரது தாய், தந்தை, சகோதர சகோதரிகளை கேவலமாக பேசுவது, கெட்ட வார்த்ததைகளை அதிகமாக உபயோகிப்பது, அடிக்க முயற்ச்சிக்கும் பாவனை செய்வது, அடிப்பது என்ற சம்பிரதாயங்கள் முடித்து சிறையிலடைப்பது. பெரும்பாலும் சிறையிலடைப்பது வெள்ளிக்கி கிழமை மதியத்திற்கு மேல் நடக்கும். ஏனெனில் சனி, ஞாயிறு கோர்ட் விடுமுறையாதலால் திங்கள் வரை தங்கள் கஸ்டடியிலேயே சிறையிலடைத்து துன்புருத்தலாமென.

4. புகாரின் பேரில் விசாரணையின் பொழுது கணவர் தரப்பினர் தன்னிடம் உள்ள ஆதாரங்களை எடுத்து வைத்தால், அந்த ஆதாரங்களை லஞ்சம் கொடுத்த பெண் தரப்பிடம் கொடுத்து பொய் புகாரை மாற்றி எழுதி வருமாறு ஆலோசனை வழங்கி பிறகு முதல் தகவல் அறிக்கை பதியப்படும்.

5. மேலும் அவமானத்தை ஏற்படுத்த, பத்திரிக்கை நிருபர்களுக்கு போன் போட்டு வழக்கை பத்திரிக்கையில் பிரசுரிக்க ஏற்பாடு செய்வார்கள். அதிகமாக பயப்படுபவர்களிடமும், அவமானத்திற்கு அஞ்சுபவர்களிடமும் அதிகமாக பணம் கறக்க முடியும், கறந்துக்கொண்டே இருக்க முடியும் என்பது லாஜிக்.

6. வழக்கு பதிவு செய்யாமல் மிரட்ட மட்டுமே காவல்துறையை நாடும் பெண்கள், தான் விருப்பப்பட்டதை எழுதிக்கொண்டுவந்து காவல்துறை உதவியுடன் கணவரிடமும், அவர்கள் பெற்றோரிடமும் நிர்பந்தித்து கையெழுத்து வாங்கி வைத்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு கணவரின் பெற்றோரையும், உறவினர்களையும் உதறி விட்டு தனிக்குடித்தனம் வர சம்மதிப்பதாகவும், பெற்றோர் சம்பாதித்த வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்க சம்மதிப்பதாகவும், வருமானம் அனைத்தையும் மனைவியிடம் மட்டுமே கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், இனிமேல் (பொய்யாக) வரதட்சனை கேட்க மாட்டேன், அடிக்க மாட்டேன், திட்ட மாட்டேன் எனவும் கணவர், அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புக்களிடம் எழுதி வாங்கி தன் இஷ்டப்படி குறுக்கீடில்லாமல் வாழ.

7. கணவர் தரப்பினர் இதைவிட அதிகமாக லஞ்சம் கொடுத்தால், விசாரித்துக்கொண்டு இருக்கிறோம் என்று அதிக துன்புறுத்தல் இருக்காது. ஆனால் மகளிர் காவல்நிலையம் என்பது இளம்பெண்கள் கொடுக்கும் புகார்களுக்கானது என்பதால் தொல்லை அதிகமில்லாமல் வழக்கு பதியப்படும்.

8. முடிந்தவரை அதிகமானோர் (குறிப்பாக வயதானோர்) மீது பல்வேறு சிக்கலான சட்டபிரிவுகளில் வழக்கு பதியப்படும். அடிக்கடி காவல்நிலையத்திற்கு நெருக்கமான வக்கீல்களுடன் கலந்துரையாடி எந்தெந்த சிக்கலான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய எந்தெந்த மாதிரியான சம்பவங்கள் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடவேண்டும் என. ஏனெனில் இதனால் காவல்துறையினருக்கு பல வகையில் லாபம் உண்டு என்ற உண்மையை விரிவாக காண்போம்.

9. காவல்துறை கட்டப்பஞ்சாயத்திலேயே மானத்திற்கு பயந்து பணமோ, சொத்தோ கொடுத்து செட்டிலானால் அதில் குறிப்பிட்ட சதவிதத்தை காவல்துறையினருக்கு கொடுத்து விட வேண்டும் என்பது சட்டம்.


வழக்கு (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டவுடன், மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து வசூலை ஆரம்பித்து பிரித்துக்கொள்வார்கள்.

முதல் குழு (குற்றம் சுமத்தியவர்களிடமிருந்து மேலும் பணம் பறிப்பது):

1. நல்ல வக்கீலாக அமர்த்திக்கொள்ளுங்கள், எனக்கு தெரிந்த வக்கீல் உள்ளார் என வக்கீலுக்கு ஆள் பிடித்து கொடுத்து கமிஷன் பெற்றுக்கொள்வார்கள்.

2. சார்ஜ் ஷீட் பதிவு செய்வதற்காக விசாரணை செய்கிறோம் என அடிக்கடி அழைத்து, உடன் சாட்சிகளையும் அலையவிட்டு வசூல் செய்து கொண்டே இருப்பார்கள். விசாரனைக்கு காலையில் வரச்சொல்லி மாலை வரை விசாரணை அதிகாரி (எல்லாம் ஒரே மகளிர் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தான், அதே ஆள் தான்) காக்க வைத்து பிறது அடுத்த நாள் காலை வரச்சொல்லி விசாரணை அதிகாரி வேண்டுமென்றே வெளியே சென்று லேட்டாக வருவார்கள். அதுவரை காத்து இருக்க வேண்டும். இல்லையெனில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிக்கல் ஏற்படுத்துவார்கள். இப்படியெல்லாம் பாடுபடுத்தி பணம் கறந்துக்கொண்டே இருப்பார்கள் சார்ஜ் ஷீட் பதிவு செய்யும் வரை.

3. கோர்ட், கேசு என வருடக்கணக்கில் அலைவதைவிட எதிர்தரப்பிடம் சமரசம் பேசி பணமோ, சொத்தோ வாங்கித்தருகிறேன், உன் இஷ்டப்படி தனிக்குடித்தனம் வாழவும், சொல்கிற கண்டிஷன்களுக்கெல்லாம் ஒத்துக்கொண்டு கணவர் வாழவும் எழுதி வாங்கித்தருகிறோம் என சமரசத்திற்கு முயற்சித்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுருத்தி மீண்டும் பெரும் தொகை கறப்பார்கள். இவ்வளவு நடத்திய பிறகும் இதன் உள் நோக்கம், கோர்டிற்கு போன பிறகு பணம் பறிக்க முடியாது, கேசுக்காக காவல்துறையினரும் வருடக்கணக்கில் அலைய வேண்டும்.இரண்டாவது குழு (குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமிருந்து அக்கறை உள்ளவர்கள் போல் பேசி பணம் பறிப்பது):

1. நல்ல வக்கீலாக அமர்த்திக்கொள்ளுங்கள், எனக்கு தெரிந்த வக்கீல் உள்ளார் என வக்கீலுக்கு ஆள் பிடித்து கொடுத்து கமிஷன் பெற்றுக்கொள்வார்கள்.

2. சார்ஜ் ஷீட் பதிவு செய்வதற்காக விசாரணை செய்கிறோம் என அடிக்கடி (குறிப்பாக வயதானோர்களை) அழைத்து, குற்றவாளிகள் போல கேவலமாக நடத்தி, உடன் சாட்சிகளையும் அலையவிட்டு வசூல் செய்து கொண்டே இருப்பார்கள். விசாரணைக்கு காலையில் வரச்சொல்லி மாலை வரை விசாரணை அதிகாரி (எல்லாம் ஒரே மகளிர் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தான், அதே ஆள் தான்) காக்க வைத்து பிறது அடுத்த நாள் காலை வரச்சொல்லி விசாரணை அதிகாரி வேண்டுமென்றே வெளியே சென்று லேட்டாக வருவார்கள். அதுவரை காத்து இருக்க வேண்டும். இல்லையெனில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிக்கல் ஏற்படுத்துவார்கள். இப்படியெல்லாம் பாடுபடுத்தி பணம் கறந்துக்கொண்டே இருப்பார்கள் சார்ஜ் ஷீட் பதிவு செய்யும் வரை. பணம் கொடுக்காதோர் நிலை நடமாடும் பிணம் வாழ்க்கை.

3. வயதானவர்களை சாகப்போற வயதில் ஏன் கோர்ட், கேசு என அலைய விடுகிறீர்கள் என சென்டிமென்டாக பேசி, சார்ஜ் ஷீட்டிலிருந்து ஒவ்வொருவரின் பெயரையும் (விசாரணையில் உண்மையில்லை என) எடுக்க பல ஆயிரத்திலிருந்து லட்சங்கள் ஆகும் என பேரம் பேசி பணம் பறிப்பது. சிலருக்கு சிக்கலான சட்ட பிரிவிலிருந்து விடுவிக்க ஒரு பேரம் என இங்கு தான் அதிகம் பணம் பறிக்க முயற்ச்சிக்கப்படும்.

4. கோர்ட், கேசு என வருடக்கணக்கில் அலைவதைவிட எதிர்தரப்பிடம் சமரசம் பேசி பணமோ, சொத்தோ வாங்கித்தருகிறேன், உன் இஷ்டப்படி தனிக்குடித்தனம் வாழவும், சொல்கிற கண்டிஷன்களுக்கெல்லாம் ஒத்துக்கொண்டு கணவர் வாழவும் எழுதி வாங்கித்தருகிறோம் என சமரசத்திற்கு முயற்சித்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுருத்தி மீண்டும் பெரும் தொகை கறப்பார்கள். இவ்வளவு நடத்திய பிறகும் இதன் உள் நோக்கம், கோர்டிற்கு போன பிறகு பணம் பறிக்க முடியாது, கேசுக்காக காவல்துறையினரும் வருடக்கணக்கில் அலைய வேண்டும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோயாளிகளை சீக்கிரம் சாகடிக்க காவல்துறை ஒன்றே போதும். அதிகமானோரை விசாரனை என்ற சித்ரவதையில் ஊனமாக்கியதும், உயிரோடு சாகடித்த புகழும் காவல்துறையையே சாரும்.
நமது சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதும், அதை வாபஸ் செய்வதும் நிமிடத்தில் நடக்கும் வேலை. உண்மையை நிரூபிக்க அத்தனை ஆதாரங்களை காட்டினாலும் விடுவிக்க வருடங்கள் ஆகும்.


விரைவில் கீழ்கண்ட தலைப்பில்:
• வக்கீல்கள் எனும் பணத்திற்காக கேவலமான சிந்தனை, செயல்பாட்டை கொண்டவர்கள்,
• கோர்ட் மற்றும் நீதிபதிகள் என்ற அப்பாவிகளை அலையவிட்டு மனஉலைச்சலை உண்டாக்கி உயிரோடு சாகடிப்பவர்கள்.
• வரதட்சனை என்றால் என்ன?
• பத்திரிக்கை துறை என்ற சிந்திக்கும் திராணியற்ற அரை வேக்காட்டுதனமானவர்கள்.
• வழக்கிற்கு பிறகு இரு தரப்பினரின் மன நிலை
• அரசாங்கத்திற்கு வேண்டுகோள்