Monday, December 26, 2011

சிறை மற்றும் நீதித்துறையின் அவல நிலை

சிறை மற்றும் நீதித்துறையின் அவல நிலை.

முன் பதிவை பார்வையிட்டு தொடர்ந்தால் விளக்கமாக புரியும்.
வரதட்சணை கொடுமை வழக்கு – ஒரு பார்வை
மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் யதார்த்த நிலை

சிறை:
சிறையிலிருப்பவர்களெல்லாம் குற்றம் செய்தவர்களில்லை, நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் தட்சணை கொடுக்க வசதியில்லாதவர்கள் அல்லது வழி தெரியாதவர்கள்.
நாம் கண்கூட பார்க்கிறோம் எவ்வளவோ சமூக விரோதிகள் சுதந்திரமாக உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். காவல்துறையை கவனித்து குற்றப்பத்திரிக்கையை கரெக்ட் செய்ய முடியவில்லையெனில், நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், பென்ச், உயர்நீதிமன்றம், பென்ச், உச்ச நீதிமன்றம், பென்ச் என நிறைய வழிகள் உள்ளது. அயோக்கியர்களை யோக்கியர்கள் என்று வாதாடத்தான் வக்கீல் கூட்டமே உள்ளது ஏனெனில் பணம் நிறைய கிடைக்கும். ஏன் முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத் மாலனி கூட பணம் அதிகம் கொடுத்தால் வாதாடி வெளியே கொண்டு வந்து விடுவார்.

பணம் கொடுத்தால் சிறையில் நமக்கு வசதியும் கிடைக்கும், பிறருக்கு தொல்லையும் ஏற்படுத்தலாம். இது பற்றியே பெரிய தொடர் எழுதலாம்.

அப்பாவிக்கு சிறை வாழ்க்கை என்பது கொடுமையிலும் கொடுமையானது. அவன் வேலையிழந்து கௌரவம் இழந்து குடும்பத்தையும் அனாதையாக்குவது சொல்லிமாளாது.

மனித உரிமையை பேசுகிறவர்களுக்கும், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்யும் வக்கீலுக்கும் சொல்ல விரும்புவது சமூக சேவை கண்ணோட்டத்தில் சிறையிலுல்லவர்களின் மனக்குமுறல்களை கேட்டு நீதியை நிலைநாட்டி விடிவுகாலம் பிறக்க வழிசெய்யலாம். அவர்களை நம்பி வாழ்ந்த குடும்பத்திதனரின் பணத்தேவைக்கு உதவலாம். அவர்களை எப்படி நாட்டின் சொத்தாக மாற்றுவது என நல்ல சமூக சூழ்நிலையை சிறையில் ஏற்படுத்தலாம். மனிதனை மனிதனாகவும் மிருகமாக்குவதும் அவனை சுற்றி அமைந்துள்ள சூழலே.

உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அப்பாவிகளை சிறைக்கு அனுப்பிய தகுதியில்லாத காவல் துறையினர், பணத்திற்காகவே அநீதிக்காக போராடும் வக்கீல்கள், சம்பிரதாயத்திற்காக வேலை செய்யும் நீதிபதிகள்.


அரசாங்கத்திற்கு:
என்ன தான் சம்பிரதாயத்திற்கு சட்டங்கள் உத்தரவு போட்டாலும், அதை நடைமுறை படுத்தி நீதியை நிலைநாட்டினால் வக்கீல்கள், நீதிபதிகள், காவல்துறையினர், அரசியல்வாதியினர் திருந்துவது என்பது சாத்தியப்படாத ஒன்று. ஏனென்றால் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வரமுடியும், போட்ட பணத்தை எடுக்க இந்த நெட்வொர்க் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும். எனவே அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பு:
இந்தியக்கலாச்சாரத்திற்கும், இந்தியக்குடிமகனுக்கும் முன்னுதாரனகாக அரசுத்துறையினரை உறுவாக்கி செயல்படுத்தி முன்னுதாரனமாக செயல்பட வேண்டும்.

தகுதியும், திறமையும் இல்லாதவர்களை பதவியை விட்டு தூக்கியெறிய வேண்டும். தவறே செய்யாத நான் எதற்காக அலைய வேண்டும், காவல் நிலையத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், சிறைக்கு செல்ல வேண்டும், வக்கீல் பீஸ் கொடுக்க வேண்டும், நீதிமன்றம் அலைய வேண்டும், மனம் போன போக்கில் சட்டத்தை வளைத்து தீர்ப்பாக சொல்லும் நீதிபதிக்கு அடிபணிய வேண்டும். தவறு செய்தது தகுதியும் திறமையுமில்லாத காவல்துறை, நீதித்துறையினர்.

1) அரசு மருத்துவமனை உள்ளது போல், அரசு வக்கீல்கள் அமைப்பு ஒன்றை 100 கேசுக்கு 1 வக்கீல் என நிருவி அப்பாவிகளுக்கு அரசாங்க செலவில் வாதிட வேண்டும். பணத்திற்கு ஆசைபட்டு காவல்துறையும், நீதித்துறையும் பணம் (லஞ்சம்) கொடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக போடும் பொய் கேசுக்கு அப்பாவி எதற்கு வக்கீல் பீஸ், சிறைவாசம், வீணான அலைச்சல் படவேண்டும்?. துறையை ஒழுங்குபடுத்த முடியாத அரசு பொறுப்பேற்று செலவு செய்ய வேண்டும். முழுமையான விசாரனைக்கு பின் அப்பாவி, நிரபராதி என நிரூபிக்கப்பட்டால், சரிவர விசாரிக்காமல் செயல்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர், அரசு (காவல்துறை) தரப்பு வழக்கறிஞர், பணத்திற்கு ஆசைபட்டு அநீதியை நிலைநாட்ட பெண்ணின் சார்பாக வாதாடி அப்பாவிக்கு தொல்லை கொடுத்த வக்கீல், எதையும் முழுமையாக ஆராயாமல் ஜாமீன் கொடுக்க மறுத்து அப்பாவிகளை ஜெயிலுக்கு அனுப்பி அந்த (நடிப்பு) பெண்ணிடம் நல்ல பெயர் வாங்கிய நீதிபதி, சுய லாபத்திற்காக அரசாங்கத்தை ஏமாற்றி பொய் புகார் கொடுத்த பெண் ஆகியோரை (அப்பாவிகளை அல்லல் படுத்தியதற்கு தண்டணையாக) குறைந்தது 1 வருட சிறைவாசத்தை கட்டாயமாக்க வேண்டும். நீதியை காக்க வேண்டியவர்களே அப்பாவிக்கு அநீதி இழைத்தால் அரசு தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டும்.
2) பள்ளி, கல்லூரி, அரசு அமைப்புகளின் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனது உரிமை சட்டம், தற்காப்பு சட்டம், இந்திய பொது சட்டங்கள் என ஏதாவது அரசு போதித்துள்ளதா?

வழக்கறிஞர்கள்:
வழக்கறிஞர்களுக்கு என்று அரசு எந்த வரைமுறையே விதிக்காததால்,
நீதி நேர்மையை புறந்தள்ளிவிட்டு, குற்றம் செய்வவர்களை (சட்டத்தை குழப்பி) தண்டணையிலிருந்து தப்பிக்கவைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு குற்றசெயல் புரிபவர்களின் வெற்றிகரமாக செயல்படுவதற்கு பின்னால் வக்கீல்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்கப்படாத உண்மை. அதிகமாக வழக்குகள் பதிவாகுவதற்கு பின்னாலும், வழக்குகள் தேங்கி கிடப்பதற்கு பின்னாலும், வழக்குகள் இழுத்துக்கொண்டே போவதற்கு பின்னாலும் வழக்கறிஞர்களை தவிற வேறு யாரும் கிடையாது.
தனது ஒவ்வொரு கிளைன்டையும் பொன் முட்டையிடும் வாத்தாக பாவித்து வருடக்கணக்கில் பணம் பார்க்க ஆசைபடுவார்களே தவிற, வழக்கை சீக்கிரம் முடித்து பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து பார்க்க ஆசைபடமாட்டார்கள். பணத்திற்காக எந்த அப்பாவிகளின் மீதும் வழக்கு போட்டு துன்புருத்த தயங்க மாட்டார்கள். நீதிபதியிடம் எப்படி எப்படியெல்லாம் நடித்து தப்பிக்க வேண்டுமென்பதை தனது கிளைண்டை நடிக்க வைப்பதை சாதாரணமாக கோர்ட் வளாகத்தில் காணலாம்.

நீதிபதிகள்:
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான குற்றத்திற்கு ஒரே மாதிரியான தீர்ப்பு என்பது கிடையாது. ஒவ்வொரு நீதிபதியும் இரக்கப்பட்டு மனது வைத்தால் தான் அப்பாவி தப்பிக்க முடியும். இவர்கள் சொல்கின்ற தீர்ப்பால் பாதிப்புக்குள்ளான அப்பாவி, நீதிபதியை குறை (எதிர்த்து) கூற முடியாது. வழக்கை மறு ஆய்வு செய்யச் சொல்லி தாழ்மையுடன் முறையிட மட்டுமே முடியும். நீதிபதிகள் அளித்த (தவறான) தீர்ப்பை, சரி என்று வர்ணம் பூச நிறைய சட்டங்கள் துறையை சார்ந்தவர்களுக்கு கை கொடுக்கிறது.
பொதுவாக தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டங்கள், அப்பாவியை அல்லல் படுத்துவதற்கும், குற்றம் செய்பவர்களை தண்டனையிலிருந்து தப்பிப்பதர்க்கும் பெரிதும் உதவுகிறது என்ற நிதர்சன உண்மையை தெரிந்துக்கொள்ள சட்ட அறிவு வேண்டுமென்பது அவசியமில்லை, பொழுது போக்கிற்காக ஒரு நாள் கோர்ட் சென்று வேடிக்கை பார்த்தால் எவரும் எளிதில் புரிந்துக்கொள்ளலாம்.

பொன்னுக்கும், பெண்ணுக்கும் ஆசைபட்டு தீர்ப்பளிக்கின்ற நீதிபதிகள் பெருகி வருவது வருத்தப்பட கூடியதாக உள்ளது.

திருமணத்திற்கு முன் உறவு கொள்வது என்றால், இருவருக்கும் தண்டணை கொடுங்கள். மைனர் பெண்ணாக இருந்தால் பெண்ணின் பெற்றோரையும் சேர்த்து தண்டியுங்கள். ஆசை வார்த்தை கூறி கற்பழித்தார் என்பதே முரண்பாடாக உள்ளதே?

ஒரு பெண், தன்னை காதலித்து விட்டு அல்லது உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்துக்கு மறுக்கிறார் என்று ஆண் மேல் புகார் தெரிவித்தால் காவல்துறையும், நீதித்துயையும் காட்டும் வேகம், எதிர்மறையாக ஒரு ஆண் புகார் கொடுத்தால் பெண்ணை மிரட்டி, வற்புறுத்தி திருமணம் செய்து வைக்குமா அல்லது பெண்ணை வைத்தே கற்பழிப்பு புகார் கொடுக்க வைத்து ஆணை தண்டிக்குமா? திருமண பந்தத்திற்கு பெண்ணிற்கு தன்னை விட வசதியான ஆணை ஏமாற்றி திருமணம் செய்துக்கொள்ள முடியும். ஆண் ஆசை படக்கூடாது.

ஆண்களாக பிறந்ததால் அரசு மானியமா கொடுக்கிறது?

பிறருக்கு துன்பம் விளைவிக்காத தனி மனித, குடும்ப சுதந்திரத்தில் தலையிட்டு வற்புறுத்தி அடக்கியாள நினைப்பது எப்படி சுதந்திரமாக இருக்கும். பிடிக்காதவர்களுடன் வாழ வற்புறுத்துவதும் சித்திரவதை தானே.

தீர்ப்பு வரும் வரை வருடக்கணக்கில் இருவரது உணர்வு உள்ளங்களை சிறையிலடைப்பதும் கொடுமை தானே. இதனால் அவர்கள் உணர்வுகளுக்கு வடிகால் வேண்டி தவறான பாதைக்கு சென்று சமூக சீர்கேட்டிற்கு செல்ல அரசாங்கமே சூழ்நிலை ஏற்படுத்தி தருவது சரியா?

சேர்ந்து வாழ்வது சந்தோசமா, பிரிந்து வாழ்வது சந்தோசமா என முடிவெடுக்க வேண்டியவர்கள் இரண்டு உள்ளங்களே. அதற்கு ஏன் மூன்றாவது மனிதனாகிய நீதிமன்றத்திற்பு 10,20 வருடம் யோசனை. மீடியேசன் சென்டரில் 3 மாதத்திற்குள் இருவரும் பேசி நீதிபதி சாட்சியாக முடிவெடுத்து தீர்விற்கு எட்ட வேண்டியது தானே. எத்தனை நாள் வாழ்வோம் என்பதே உத்திரவாதமில்லாத உலகில் வாழ வேண்டி விவாகரத்து கேட்டால் உணர்ச்சி போய் சாகும் போது தீர்ப்பளிப்பது கொடுமையில்லையா? உணர்ச்சியற்ற வயதில் நீதிபதிகளாக அமர்ந்திருப்பதால் பிறரின் உணர்வு எப்படி புரியும்?

குழந்தை பாக்கியமில்லை என்ற காரணத்தை கொண்டு விவாகரத்து பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதெனில் அரசே பெண்களை அனுப்பி குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யுமா? தனி மனிதரின் சந்தோசத்தை தீர்மானிப்பது அடக்குமுறையல்லவா?

காவல்துறையினரையும், நீதித்துறையினரையும் மட்டும் முறைப்படி முழுமையான விசாரனை செய்தாலே 90 சதவித சமூக விரோதிகளை கண்டுபிடித்து விடலாம். இந்த இரண்டு துறையினரும் நீதிக்கும், நேர்மைக்கும் பயந்து கடமையை செய்தால் 90 சதவித குற்றம் குறையும், ஏனென்றால் குற்றம் செய்பவர்களை ஊக்குவிப்பவர்கள் (குறிப்பாக நீதித்துறை) இல்லாததால். இன்வெஸ்டிகேஷன் ஆபிஸர் க்கும் தன்டணை வழங்கப்பட வேண்டும்.

நீதிபதிகளுக்கு ஒவ்வொரு வழக்கின் அனுபவத்தின் மூலம் தௌ;ளத்தெளிவாகத் தெரியும் (1) எந்தெந்த சட்டப்பிரிவுகள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தப்படுகிறதென்பது. (2) எந்தெந்த வழக்கறிஞர்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள், வழக்கை குழப்பிக்கொண்டேயிருக்கிறார்கள், வழக்கை நீட்டித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரே விசயத்திற்காக பல்வேறு வழக்குகளை போட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள் என்பதும். ஏனெனில் நீதிபதிகள் வானத்திலிருந்து குதித்தவதுகள் இல்லை, வழக்கறிஞர்களாக இருந்து வருடக்கணக்கில் மனிதத்தன்மையே இல்லாமல் அப்பாவிக்கு தொல்லை கொடுத்தவர்களே.

இன்று விவாகரத்து அதிகரித்து வருவதற்கு கலாச்சார சீர்கேட்டை ஒழுங்குபடுத்த தவறிய அரசும், மனம் போன போக்கில் (இளம்) பெண் வாழ ஒருதலைபட்சமாக செயல்படும் காவல்துறையும், நீதித்துறையுமே பொறுப்பு. நீதியை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு காவல்துறையும், நீதித்துறையும் பொய்கேசு போடுகிற கெட்ட பெண்களுக்கு புரோக்கராக செயல்பட்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கணவர் வீட்டாரிடமிருந்து பணம் பறித்து கொடுத்து, தொல்லை கொடுத்து நிம்மதி இழக்க செய்து கூட்டு குடும்ப வாழ்க்ககையையே கெடுப்பது வருத்தமளிக்கக் கூடிய விஷயம்.
ஒவ்வொரு குடும்பத்தினரையும் கேட்டால் தனது குடும்பத்திலோ, உறவினர்கள் குடும்பத்திலோ இது மாதிரி பொய் கேசு கொடுத்து காவல்துறை நீதித்துறையினரின் உண்மையை விசாரிக்காமல் அநீதியிழைத்தல், கட்ட பஞ்சாயத்து, பணம் பறிப்பு, மனம் நொந்து உடல்நிலை பாதித்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளதை நினைவுகூறி இந்த மாதிரி மனிதர்களை சந்திக்காமல் மரணமடைந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று வேதனையுடன் கூறுவதை கேட்க வருத்தமாக இருக்கிறது.

இது மாதிரி பொய் கேசில் மாட்டி காவல்நிலையம், கோர்ட், லஞ்சம், வக்கீல் பீஸ், கோர்ட் அலைகழிப்பில் நொந்து போனவர்கள் சொல்வது, பந்த பாசத்தோடு வாழனும் என்பதற்காக தான் பொறுமையாக உள்ளேன். இல்லையெனில் கொளுத்தி விட்டுவிட்டு ஆத்ம திருப்தியுடன் இந்த தொல்லைகளை எதிர்கொள்ள முடியும். தப்பு செய்துவிட்டு தப்பிப்பதற்காக செலவு செய்வதில் சந்தோசம் உள்ளது. அநீதியை எதிர்த்து போராடுவதில் மன உளைச்சல் தான் அதிகமாகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருக குணம் உள்ளது. அதை சரியான பாதையில் செலுத்தி நாட்டின் சொத்தாக ஆக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. அப்பாவியின் நேரமும் பணமும் நல்ல சிந்தனையும் ஏன் வீணாக்கப்பட வேண்டும் பொய் வழக்கிற்காகவும் அதை சரிவர விசாரிக்கத்தெரியாத காவல்துறை நீதித்துறையின் செயல்பாடுகளினாலும்? சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறாhகள் என்று தெளிவாக தெரிந்தும் அதை சரி செய்யாமல் யார் வீட்டு எழவோ என இருக்கும் அரசாங்கம், மாற்றாக ஊருக்கு ஊர் அரசாங்க மருத்துவமனை நிறுவியுள்ளதைப்போல் அப்பாவிகளுக்காக இலவச வக்கீல்கள், நிவாரணங்கள் வழங்கினால் நன்றாக இருக்கும்.

அதிகமாக மக்களை கொலை செய்தவர்களில் முதன்மையாக நீதிபதியும், காவல்துறையினரும் வருவார்கள். அடுத்ததாக வக்கீல்கள் வருவார்கள். காவல்துறை மனிதனை கொல்வதில் தீவிரவாதத்தை கடைபிடிப்பார்கள். நீதித்துறை மனிதனை கொல்வதில் மிதவாதத்தை கடைபிடிப்பார்கள்.

இந்தியாவில் 98 சதவிதத்திற்கு மேல் உள்ளவர்கள் தன்மானத்தையும் கௌரவத்தையும் வாழ்வியலாக கடைபிடிக்கக்கூடியவர்கள்.

இந்த கட்டுரை எழுதத்தூண்டிய எனது வேதனையை நீதிபதிகள் புரிந்துக்கொள்ள வேண்டுமெனில் அப்பழுக்கற்ற கண்டிப்பான பாசமான நல்ல நேரிய முறையில் பிள்ளைகளே தனது எதிர்கால சொத்து என தன்னை வளர்த்த பெற்றோரை பெற்றிருந்து, தன்மானத்தோடு நேர்மையாக கடின உழைப்பில் முன்னேறி, கௌரவமான குடும்பமான வாழ்க்கை வாழ்ந்து, வரதட்சனை வாங்காமல் தனது நேர்மையான சம்பாத்யத்தில் திருமண செலவு செய்து மனைவியாக்கி, மனைவியாக வந்தவளை நல்லவள் என நினைத்து தனது செல்வங்களை அவளின் சந்சோசத்திற்கு செலவு செய்தும் தன்னையும் மதிப்பாக நினைக்கும் பெற்றவர்களையும் உதாசீனப்படுத்தி கேவலப்படுத்தி, கௌரவமாக வாழ அறிவுறுத்துவதை தனது சுதந்திரத்திற்கு இவர்கள் தடையாக இருப்பதாக (ஈகோ) நினைத்து இவர்களை கேவலப்படுத்தி பணம் பறித்து பிரிய வேண்டுமென்ற எண்ணத்தில் பொய்யான வரதட்சனை கொடுமை வழக்கை கொடுத்து, மகளிர் காவல்நிலையத்தில் அநீதியாக துன்புறுத்தப்பட்டு, கேவலபட்டு, பாரபட்சமான பாவம் பொண்ணு என்று பார்க்கின்ற நீதிபதி அப்பாவியான உங்களையும், உங்கள் பெற்றோரையும் 15 நாளில் காவலில் வைத்து, சிறையிலும் கேவலப்பட்டு, சிறைவாசம் முடிந்து வெளிவந்து, இந்த நிகழ்வால் அவமானப்பட்டு உருக்குலைந்து நடைபிணமாக வாழும் உங்கள் தந்தையை கேட்டு பாருங்கள் எவ்வளவு வேதனை அடைந்தார்கள் என்று? செல்லமான வளர்த்த தன் பிள்ளையை தன் கண்முன்னேயே செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருப்பதை பார்த்து எவ்வளவு மன அழுத்தமடைந்தார்களென்று? உங்கள் மனசாட்சியை கேட்டுபாருங்கள் உங்கள் கண்முன் பெற்றவர்கள் பட்ட வேதனையை எண்ணி எவ்வளவு வருத்தம் ஏற்பட்டதென்று? உங்களின் பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், உறவினர்களை கேட்டுபாருங்கள் எவ்வளவு வேதனைபட்டார்கள் அவமானப்பட்டார்களென்று? இந்த வேதனை அரசாங்கத்திற்கோ, அநீதி இழைத்த காவல்துறைக்கோ, அதற்கு துணை போன (அரசு மற்றும்) வக்கீலுக்கோ, தீர விசாரித்து நடுநிலையாக தீர்ப்பளிக்காத நீதிபதிக்கோ, கேவலப்பட்ட ஜென்மமாக நடத்திய சிறைத்துறையினருக்கோ, உண்மையை அறியாமல் பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட்டு மேலும் அவமானப்படுத்திய பத்திரிக்கை துறைக்கோ உணரமுடியாது.

மேலும் சார்ஜ் ஷீட் தயார் செய்கின்ற வரை காவல்துறையினர் கொடுக்கும் தொல்லையை சகித்துக்கொண்டும், வருடக்கணக்கில் வக்கீலுக்கு பீஸ் கொடுத்தும், தனது வேலையையெல்லாம் விட்டுவிட்டு நீதிமன்ற வாசலில் நாள் முழுக்க காத்து கிடந்தும், வழக்கு ஒத்தி வைப்பு, வேலைநிறுத்தம், நீதிபதி வரவில்லை, வக்கீல் வரவில்லை, எதிர் தரப்பு ஆஜராகவில்லை, வழக்கில் வக்கீல்கள் சட்டத்தை ஏமாற்றுகின்ற விதம் என அனைத்தையும் நடைபிணமாக சகித்து மன நிம்மதியிழந்து, வேலையையிழந்து, கௌரவத்தையிழந்து, பணத்தையிழந்து, உடல்குன்றி சாகக்போகும் தருவாயில் அப்பாவி என தீர்ப்பு வருவதற்குள் பெற்றோர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகவே இறந்து இருப்பார்கள். திறமையான வக்கீலை வைத்து நாம் அதிக செலவு செய்யாவிடில் தீர்ப்பு நமக்கு பாதகமாக இருக்கும். எப்படி தீர்ப்பு வந்தாலும் தப்பு செய்த அந்த பெண்ணுக்கு எந்த தண்டனையும் நீதிபதி கொடுக்க மாட்டார். நம்மிடமிருந்து வலுக்கட்டாயமான ஜீவனாம்சமாக பணம் பறித்து பெண்ணிடம் கொடுப்பார்கள். இப்படி பட்ட மனசாட்சியில்லாதவர்களை கொண்டது தான் அரசாங்கம். சுருங்கச்சொல்ல வேண்டுமெனில் அப்பாவிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக கொள்ளையடித்து கெட்ட பெண்களுக்கு கொடுப்பதை தான் காவல்துறையினரும் நீதித்துறையினரும் நீதிக்கு அப்பாற்பட்டு செய்கிறார்கள்.

No comments: